சினிமா செய்திகள்
ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் சுனைனாவின் ரெஜினா பட டிரைலர்
சினிமா செய்திகள்

ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் சுனைனாவின் 'ரெஜினா' பட டிரைலர்

தினத்தந்தி
|
7 Jun 2023 6:25 AM IST

சுனைனா நடித்துள்ள 'ரெஜினா' படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

சென்னை,

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் 'ரெஜினா' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சுனைனாவின் மாறுபட்ட நடிப்பில், இந்த டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.


மேலும் செய்திகள்